இருட்டிலிருந்தேன் ,,..
வலியை விடக் கொடுமையானது இருட்டு..வழி வழியாய் பழக்கப்படுத்தப்பட்ட இருட்டு அச்சமூட்டக்கூடியது.அதிலும் எதுவென்று புரியாமல் மனதை அலைகழிக்கும் இருள் வெறுமையை பீறிட்டு எழ செய்கிறது.எனக்கு இப்போது அப்படித்தானிருந்தது..
வானத்தில் கருத்த மத யானைகள் சிவசெனைகளை போல பால் நிற மேகங்களை துரத்தி பிடித்துக்கொண்டிருந்தன.குஜராத்தின் கலவர வெளிகளில் ஓடி ஒழிய இடம் தெரியாமல் பதித்து போன சிறுமியின் முகத்திற்கு ஒப்பாய் இருந்தது நிலவின் பதட்டம்.
நானும் நிலவை போலவே கருத்துக்கிடந்த காரைத்தரையில் படுத்திருந்தேன்.ஏன் இப்படி ஆணோமென மனது குமைந்து கொண்டிருந்தது.தூங்க முடியவில்லை.சாலைகளில் நாயின் ஊளை கூட நின்று விட்டது..காற்றும் மனிதர்களின் மீதான நேசத்தை நகரமயமாக்களால் தொலைத்து விட்டிருந்தது..
இந்த வயதில் காதல் என்கிற மாயவலை தேவைதானா ..நாட்களை எண்ணி நகர்த்துகிற எனக்கு அவசியமில்லாத தேவைதான் இது .ஆனாலும் பிடரி மயிரை பிடித்து உலுக்கும் மனதை என்ன செய்ய..ஒருவேளை என்ன ஓட்டங்களை தடைப்படுத்தும் இயந்திரம் ஏதேனும் உருவாக்கப்பட்டிருந்தால் இந்த இரவில் வானத்தையும் அவ்வப்போது அலைபேசியையும் பார்த்துக்கொண்டிருக்கிற அவஸ்த்தை இருந்திருக்காதோ..குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பியும் ஒயைந்தாகி விட்டது.விடியும் வரை இனி எந்த பதில்களும் வரப்போவதில்லை.விடிந்தாலும் பதில் வருமா என்பதும் நிச்சயமில்லை.தொடர்ந்த பல இரவுகளில் நானே தொடங்கி நானே முடிக்கும் பேரவலம்..
மூன்று நாட்களுக்கு முன்பு பேசினாள்.அப்போது கூட ஒரு தேர்ந்த நடிகைக்கே உண்டான மனோபாவத்துடன் எனது வலிகள் வார்த்தையாக விழும்போதெல்லாம் அம்மா கூப்பிடுவதாக துண்டித்து விடுவாள் .அந்த தேவதையை சிந்தித்தே மனது குமைந்து இரவுகளை தின்றது மனது.
ஆம் அவள் தேவதை தான் ..என் படத்தின் நாயகி தேவதை தான்..
காதல் அன்பெனில் வயது ஒரு தடையல்லவே . உம காதல் கதையின் நாயகியிடமா நாயகியாய் அபிநயம் செயபவரிடமா ? கதையின் நாயகி எனில் அவள் உம்முள் இதனை காலம் ஓங்கி கொலோசியத்தை போல் உயிர் உள்ளவரை அல்லவா ? அபிநய பவரிடம் எனில் உம்மிடம் அவளுக்கு தோன்றவில்லை எனில் என்ன உம்முள் ஒரு மூலையில் அவள் நினைவும் பசுமையாக இருந்துவிட்டு போகட்டுமே ரதியில் தொடங்கி ரத்தினம் திலகம் போல் . அவர்களை கடந்து வந்ததை போல் இதுவும் .
ReplyDeleteவார்த்தைகள்
மாறிய வண்ணம்
கவிதைகள்
என்பது போல் காதல் எனும் அன்பு என்ற உணர்ச்சி ஒவ்வொரு நிலையிலும் வெவேறு மனங்களிடம் !