அலைபேசியில் "ஏலேலோ எலலேலோ "என என் படத்தின் பாடல் சிணுங்கியதும் சட்டென விழிப்பு வந்தது.திடுக்கிட்டு எழுந்தபோது பாயை விட்டு நகர்ந்த கை மொட்டை மாடியின் தரையில் சுட உதறியபடி எழுந்தேன்.
அவள் தான் அழைத்திருந்தாள்..
சிணுங்கிய தொலைபேசியில் தேவதை என்கிற அவளின் பெயரையே பார்த்தபடி இருந்தேன்.எந்த்தனை அவமானங்களுக்கு இடையில் இந்த அழைப்பு ..?எடுக்க வேண்டாம் .நிறுத்திக்கொள்வோம் .எனது கட்டுப்பாடு உடைந்து சிதறுவதர்க்குல்லாக தொடர்பு அறுந்தது.
"என்னா சார் வெயிலு அடிச்சது தெரியாமா இருக்கீங்க..?"
பக்கத்து வீட்டு குண்டம்மா துணிகளை காய போட்டபடியே கேட்டாள்..
நான் பதில் ஏதும் பேசாமல் அவளையே ஒரு கணம் பார்த்துக்கொண்டிருந்தேன்.குண்டம்மாவிர்க்கு குறைந்தது 45 வயதிருக்கும்.பெரிய ரொம்ப பெரிய உருவம் .அவளது கணவருக்கு 60 வயதிற்கு மேல்.இயலாமையின் நெருக்கத்தை அனுபவிப்பது எப்படி என அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்..செயக்கில் கடை வைத்து நடத்துகிற சுசிலாவின் கணவர் அதாங்க குண்டம்மா ,தினம் வீட்டு செலவுக்கு 40 ரூபாய் கொடுப்பார் .அதில் மூன்று வேளையும் விதவிதமான உணவை செய்வாள் .அதிலும் மிச்சம் பிடித்து வட்டிக்கு விடுவாள்.அதட்டலான குரல்.அன்பானவள்.அன்பை கூட கோபமாகவே பேசுவது அவளின் இயல்பு.அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் 6 ,8 வயதில் இருக்கின்றன..
நான் அவளிடம் எதுவும் சொல்லாமல் பாயை சுருட்டியபடி கீழே வந்தேன் எனது வீட்டில் தொப்பி ராசா என்கிற ஏகலைவன் சுருண்டு தூங்கி கொண்டிருந்தான் .எனது உதவியாளன் .அவன் எப்பொழுதும் இப்படித்தான் .நிறைய இடமிருந்தாலும் ஏதாவதொரு மூலையில் உடம்பை குறுக்கி கொண்டு கால்களை கையால் கட்டிப்போட்டபடி உறங்குவான்..சில நேரம் அது தாயின் கருவறையில் இருக்கிறானோ என என்ன தோன்றும்,அவன் கால்களில் இருந்து கட்டு இன்னும் அவிழ்க்க வில்லை.ஆம் படபிடிப்பில் நாங்கள் கேட்ட இடத்தை கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதிக்க வில்லை..எல்லாம் பணம் படுத்தும் பாடு.ஆனால் நாங்களோ கையில் பணமே இல்லாமல் படமெடுக்கிறோம் .பின் எப்படி அனுமதி கிடைக்கும் ..அவசர அவசரமாக நாங்கள் தங்கியிருந்த பாழடைந்த கட்டடத்திற்கு வண்ணம் தீட்டி எடுக்க முடிவு செய்து எனது உதவி இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து காவல் நிலையம் போல உடனே உருவாக்கினார்கள்.அப்பொழுது வண்ணம் அடிக்க மேலே ஏறியவன், கீழே விழுந்ததால் இந்த கட்டு.இன்னும் கூட பட பிடிப்பை முடித்து வந்து இவ்வளவு நாளான பிறகும் கூட நாங்கள் அந்த கட்டிடத்திற்கு மாற்று வண்ணம் பூசவில்லை..எங்களின் வலியின் நீட்சியாக அது அந்த ஊரில் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
நானும் அவனருகே பையை போட்டு விட்டு தூங்க முயற்சி செய்தேன்.தூங்க முடிய வில்லை கண்கள் படுத்த படியே அறையை நோட்டம் விட்டது.இவ்வளவு நாட்களும் தோன்றாத வெறுமை என்னை ஆட்கொண்டது.வெறுமை அடர்ந்த வெறுமை..யாருமட்ட்ற கொளைகலத்தில் நான் மட்டும் குற்றுயிரோடு நிற்பதை போலிருந்தது அந்த கணம்..
அப்போது மீண்டும் அலைபேசி ஒலித்தது.அவளாக இருக்குமோ..ஏன் இப்படி நெஞ்சை பிழிகிறாள் ..அவளை விட்டு விலகி நிற்கவே முடியாதோ.னடியாகவே மாறிப்போன அவளின் பேச்சு ,சிரிப்பு,எல்லாத்தையும் கலைத்து விட்டு சாதாரண தேவதை என்கிற அடையாளத்தோடு பேசவோ,சிநேகம்கொல்லவோ,குறைந்த பட்சம் கடைசி மனிதனிடம் காட்ட வேண்டிய பரிவு கூடவா இல்லாமல் போய் விடடாள் ..இப்போது நான் அலைபேசியை எடுத்தாலும் என்ன சொல்லுவாள்
"ஹலோ ,எந்தாச்சி,என் கூட பேச மாட்டிங்களா..எந்த பிரபலம் நீங்கள் புரியல,நோட்ஸ் எழுதி,பின்னே காலேஜ் போய் ,..."
இப்படி இன்னும் இன்னும் எத்தனைஎத்தனை வாதங்களை முன் வைப்பாள் ..வேண்டாம் வேண்டவே வேண்டாம் .அலைபேசியை ஒரு முறை எடுத்து பார்த்தால் கூட மனசு பகடை சறுக்கி விடும் என பல்லைக் கடித்தபடி கண்களை இருக்க மூடிக்கொண்டேன்..
" எலலேலோ ..".ஒலித்தபடியே இருந்தது.
விறுவிறுப்பாக இருக்குகிறது. அடுத்த பதிவு என்னவோ என தவிக்கவைக்கிறது. இருப்பினும் ஏனோ பதிவுகளுக்கிடையில் ஒரு நூலிழை போல எங்கள் மனதில் தங்கள் வலிகள் வந்து வந்து செல்கிறது. விவரிக்கதான் முடியவில்லை
ReplyDelete