பசி ..பாரிய பசி ..தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் எதை அழிப்பது..நல்ல விவசாய நிலத்தை விட்டு விட்டு சேற்றில் அலைந்த கைகளை துடைத்து விட்டு, நீ நகர சகடில் கால் பதித்ததற்கு யார் பொறுப்பு..நான்தானே காரணம்..இனம் அழியும் போது புடனியில் கால் வைத்து கொண்டு தூங்கிய நான் பசியை பற்றி பேசுகிறேன்.உலகெங்கும் பசியோடு திரியும் எத்தனையோ நபர்களில் நானும் ஒருவன் அவ்வளவே..
ரதி என்கிற முதல் கருவுக்கான கதைப்பாத்திரங்கலான ரத்தினம்-திலகாவை மனதுக்குள் உள்வாங்கிய தருணம் மிக முக்கியமானது.அது மிகுந்த அற்புதமாக என் வாழ்வோடு பின்னப்பட்டிருந்தது..நான் வாழ்ந்த பெரம்பலூர் வட்டம் திருச்சியோடு இணைந்திருந்த காலம்..மானம் பார்த்த விவசாய வாழ்க்கையிலிருந்து துவங்கும் எனக்கான தருணங்கள்..
எங்கே பார்த்தாலும் விரிஞ்சி கிடக்குற சோள தட்டைகள். கம்மந்தட்டைகல்லுன்னு மஞ்சள் அப்புனாப்புல கெடக்குற ஊர்தான் செட்டிக்குளம்.ஊருக்கு நடுவுல 800 வருசத்துக்கு முன்னாடி கட்டின சிவன் கோயிலு நிமிந்து நிற்கும்..ஊரு வருதுங்கறத பக்கத்துருலருந்தே பலதடவை சொல்லிடுவோம் .. நல்ல மழை பெஞ்சா ஏரில தண்ணி வரும். அந்த வருஷம் மட்டும் நெல்லு விளையும்,மத்த நாள்ல இருக்குற ஒரே பண பயிறு வெங்காயம் அது கூட எங்க ஊர்ல மஞ்சலாதான் தழைக்கும்,அம்புட்டு தண்ணி வசதி உள்ள ஊரு அது. சிறகடிக்கிற கள்ளிக்கட்டான் குருவிகளும், சிட்டுக்குருவிகளும் 'கியாமிய கிய மியா' ன்னு கத்திக்கிட்டு திரியறதுதான் எங்களுக்கு சங்கீதம்..
நான், தவக்களை, வழுக்கை கண்ணன் எல்லாரும் எப்பவும் பள்ளியோடத்துக்குல்லையே இருக்க மாட்டம்..பள்ளியோடத்துக்கு போறதுக்கு முன்னாடி வீட்ல இருக்குற ஒரே எண்ணையான, விளக்கெண்ணைய தலையில தடவிக்கிட்டு, அம்மா ராத்திரி புழிச்ச சட்டியில உருட்டி போட்ட கம்புசோத்த ஒரு உருண்டைய தின்னுப்புட்டு கிளம்புவோம் பாருங்க..அடடா சிட்டுக்குருவிதான் அந்த வாழ்க்கை..கிட்டத்தட்ட எல்லா வீட்லயும் இதே தான் ..பெரிய மாற்றம்ன்னா அது சோள சோறாதான் இருக்கும் . தவக்களை எங்களுக்கு தலைவன்..பாடப்புத்தகத்த பள்ளியோடத்துக்கு முன்னாடி இருக்குற பாலத்துக்கு கீழ வச்சிட்டு இருங்குலாம் பழம் பொறுக்க கிளம்பிடுவோம்..ஓணான்னா தவக்களை விடவே மாட்டான்..எல்லாரும் பழத்த பொருக்கி சட்டைய அவுத்து அதுல முடிஞ்சுக்குவோம்.எப்பவும் எங்களோட ஒரே சட்ட வருசத்துக்கு ஒருக்கா பள்ளியோடத்துல தர இலவச மஞ்ச டவுசரும் வெள்ளை சட்டையும்தான்..கால் வருஷம் வரதுக்குள்ள கால் சட்டை பின்னாடி ரெண்டு நிலா வட்டம் உளுந்துடும்,சாட்டைல பித்தான தவிர வேற நிறைய இருக்கும்..நாங்க பொறுக்குன பழத்துல தவக்கலைக்கு பங்கு உண்டு..அதே மாதிரி அவன் அடிச்சா எல்லா ஓனான் மேலயும் பாறையில படுக்க வச்சி ஒன்னுக்கு அடிக்கிற உரிமை எங்களுக்கு உண்டு..
அப்படித்தான் ஒருநாளு..பத்து பைசாவ கண்ணன் அவங்க பெரியப்பாகிட்ட இருந்து வாங்கிட்டு வந்துட்டான் ..அத வச்சிட்டு ஒரு பெரிய திட்டமே போட்டான் தவக்களை..
நாங்க எல்லாரும் மொத்தமா ஒவ்வொரு பெட்டிக்கடையா போக வேண்டியது..மொத்தமா ஒரு கடைல நின்னுக்கிட்டு எனக்கு அது வேணும் இதுவேனும்னு கடைக்காரன்கிட்ட சொல்ல வேண்டியது..அவன் இதுவா இதுவான்னு ஒன்னொன்னா கேட்க,அது இல்ல,இது இல்லன்னு சொல்லறதுக்குள்ள பொட்டிக்கடையில கண்ணாடி போட்ட்லே மேல அடுக்கி வச்சுருக்கிற சூசுபறி ,மைசூர் பாக்கு பாக்கேட்டுன்னு ஒன்னு ஒண்ணா அமுக்கி கடைசியா இருக்கரவன்கிட்ட கொடுக்க வேண்டியது..மொத்தம் மூணு கடையில எடுத்தாச்சி..நாலாவது கடையில எடுக்கும் போதுதான் அவ பார்த்துட்டா..
அவ பேரு திலகா..................................
#
ReplyDeleteவிருப்பமின்மை
#
Muruga Pandian அதே மாதிரி அவன் அடிச்சா எல்லா ஓனான் மேலயும் பாறையில படுக்க வச்சி ஒன்னுக்கு அடிக்கிற உரிமை எங்களுக்கு உண்டு..
எண்ணின் பிரதிபலிப்பு உங்களின் கதையில் அழுத்தமாக உள்ளது...உங்களின் கதையை படிக்கும் தருணம்,நானாகவே இருக்கிறேன்.
Muruga Pandian:- என்னில் ஒரு சந்தேகம் பீறிட்டு எழுந்தது,உங்களின் பதிவை படிக்கும்பொழுது.அது என்னவென்றால்,என்னை அறியமைலே என்னை பின் தொடர்ந்தீர்களா என்று??????
ReplyDeleteஅனுபவம் தரும் வலிகளை எழுத்தில் மொழி பெயர்ப்பதன் சாத்தியங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறீர்கள்.....
ReplyDeleteமூர்த்தி ! வெள்ளந்தியான பாலய வாழ்கையை விட்டு நீண்ட தூரம் கடந்து வந்து விட்டோம் எனினும் இன்று மீண்டும் ஒரு குழந்தயின் குதுகலம் உங்கள் பகிர்வை படித்தவுடன் . 10 12 வயது வரை ஆண் பெண் நினைப்பில்லாமல் ஓடி ஆடி திரிந்த பால்யம் .புளியை உருண்டை ஆக்கி உள்ளே உப்பு வைத்து வெளக்கு மாத்து குச்சியில் சொருகி தின்ற லாலிபாப் ,தட்டானை பிடித்து குட்டி குட்டி கல்லை எடுக்க வைப்பது ,ஆத்து மணலில் பனைமர ஓலையை வெயிலுக்கு இதமாக செருப்பாக அணிந்தது வயகாடு வழியே ஆத்துக்கு செல்லும்போது பாம்பை பயமின்றி தாண்டியது வேலியோர மருதாநியோ மாங்கயோ அனுமதி இன்றி பறித்தது ,கோலி யும் கிட்டி புல்லும் விளையாடியது ஒரு அணாவுக்கு ஒரு ஆழக்கு வேர்கடலியை வாங்கி பாவடையில் முடிந்து வைத்து நண்பர்களுடன் பகிர்ந்தது ............. நன்றி மூர்த்தி .
ReplyDeleteபகிர்ந்தது என்னவோ
உன் பால்யத்தை
மீட்டியது இன்று
பலரின் இதய வீணையை